Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழர் தேசத்தில் தோற்கடிக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரச தலைவர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

tamil-diasporaதற்போது இலங்கைத்தீவில் நடந்துமுடிந்த தேர்தல், அங்கு வாழும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை எவ்வாறு சிறிலங்கா என்ற நாட்டுக்குள் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்ற வினாவை மீண்டும் எழுப்பி நிற்கின்றது. அத்துடன் தமது ஆட்சிக்கதிரைக்காக தமிழர்களை எவ்வாறு அடக்குகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் இன்னொரு சாட்சியாகவும் அத்தேர்தல் முடிந்திருக்கிறது.

நடந்துமுடிந்த தேர்தல்களில் தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் 32.21 விழுக்காடு வாக்குகளே மகிந்தவுக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல வட மாகாணத்தில் 27.99 விழுக்காடு வாக்குகளே மகிந்தவுக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வாறு தமிழர் தாயகத்தில் அண்ணளவாக 30 விழுக்காடு வாக்குகளை பெற்ற மகிந்த ராஜபக்ச, 70 விழுக்காடு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் மலையகத்தின் தமிழர் பிரதேசங்களிலும் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்து தமிழர் தரப்பு அனைத்தும் ஒத்த கருத்துடன் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

வடபகுதி தமிழர்களின் வாக்குகள், ஆட்சி மாற்றத்தைத் தீர்மானித்துவிடும் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட மகிந்த தரப்பு அதனைத் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை தன்னால்  பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டபோது வழமையான பேரினவாத முகத்தைக் காட்டிய மகிந்தவுடன் சிங்கள தேசமும் அள்ளுப்பட்டுச் சென்றுள்ளது.

அத்துடன் வடபகுதி தமிழ் வாக்காளர்களை, மறைமுகமாக மிரட்டி வாக்களிக்கச் செல்லக்கூடிய சூழலை இல்லாமற்செய்தது அரசதரப்பு. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து தமிழர் தரப்பின் தீர்மானத்தில் குழப்பகரமான நிலையை தமி்ழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் தமிழர்களின்  வாக்குகளை மகிந்தவுக்கு எதிராகப் பயன்படுத்தி தமது எதிர்ப்புணர்வை தமிழர்கள் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். தம்மீது திணிக்கப்பட்ட அரச தலைவருக்கான தேர்தலை சரியான வழியில் கையாண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வழிநடந்த தமிழ் மக்களும் தமிழீழ வரைபடத்தை தமது வாக்குகளால் வரைந்திருக்கிறார்கள்.

70 விழுக்காடு  தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட  மகிந்த ராஜபக்ச, சிங்கள  தேசத்தின் பெரும்பான்மைப்  பலத்தால் அந்நாட்டின்  அரச தலைவராக மீண்டும் ஆக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறான புறநிலையில் தமிழர் தேசமும் சிங்கள தேசமும் எவ்வாறு இணைந்திருக்கமுடியும் என்ற இயல்பான கேள்வியைத் தவிர்க்கமுடியாது. இவ்வாறான முரண்நிலைகளே தமிழர்களது போராட்டத்தின் நியாயத்தை மீண்டும் வெளிக்காட்டிநிற்கிறது.

தமிழர் தாயகத்தில் மகிந்தவை, தமிழ் மக்களால் தோற்கடிக்கமுடிந்தபோதும், சிங்கள தேசத்தில் மகிந்தவின் வெற்றியை அவர்களால் தடுக்கமுடியவில்லை என்பது அனைவரும் கவனிக்கவேண்டிய விடயமாகிறது.

எனவே, தமிழ் மக்களால் தங்களது விருப்பத்தேர்வை வெளிப்படுத்துவதன் மூலம் சிங்களப் பெரும்பான்மை தேசிய அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத நிலையே இன்றைய சிறிலங்காவில் இருக்கின்றது என்பது நிதர்சனமாகிறது.

தமிழ் மக்களின் விருப்பை நிறைவு செய்யமுடியாத சிறிலங்கா அரசியலில், பங்காளிகளாக தமிழ் மக்களால் எப்படி இருக்கமுடியும் என்ற தமிழ் மக்களின் கருத்தை மீளவும் உயிர்ப்பூட்டுவதாகவே இத்தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.

முன்னர் 2005 இல்  நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின்போது தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்பை சர்வதேச உலகம் கண்டித்திருந்தது. அவ்வாறான நிலை ஒன்று வரக்கூடாது என்பதற்காகவும் தமிழர்களின் புறக்கணிப்பினால் மகிந்தவின் வாக்குவிகிதம் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகவுமே இம்முறை தேர்தலில் பங்குகொள்ளும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் தமிழ் மக்களின் தலைவர்களாகப் பவனிவந்த டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் சரணாகதி அரசியல் மூலம் தான் தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் என மகிந்தவின் அதிகார பலத்துடன் வலம் வந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள்.

அதேவேளை முதன் முறையாக தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தமது குரலை கொடுத்ததன் மூலம் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தளத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலையையும் இத்தேர்தல் உருவாக்கியிருக்கிறது.

தற்போது தங்களது  அரச தலைவரை சிங்களம் மட்டுமே  தெரிவு செய்துள்ளதை தமிழர் தாயகத்தில் மகிந்தவுக்கு கிடைத்த வாக்குகள் காண்பிக்கும். இதன் மூலம் சர்வதேசத்திற்குச் சொல்லவேண்டிய செய்தியை மீண்டும் தமிழர்கள் உரத்துச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை சிங்கள தேசமே வழங்கியிருக்கிறது.

அடுத்துவரும்  எட்டு ஆண்டுகள் ஆட்சியில்  அமரத் தயாராகும் மகிந்தவின் அரசை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்கான குரலை திடமாக ஒலிக்கவேண்டிய வேளையிது. அவ்வாறு உறுதியாகப் பயணிப்பதன் மூலமே தமிழர்கள் தம்மால் தெரிவு செய்யப்பட்டவர்களையே ஆட்சியில் அமர்த்தி தன்னாட்சி உரிமையுடன் வாழமுடியும்.

- சங்கிலியன்

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010 12:30 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
தமிழர் தேசத்தில் தோற்கடிக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரச தலைவர்
2 திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010 07:07
தயா.
போராட்டத்தில் புகழ்வான போற்றப்பட வேண்டியவை நடந்து முடிந்துவிட்டது ஆனால் அவை நீடிக்கப்பட வேண்டியவையாக செயல்பட வேண்டியவையே இன்றைய தேவைக்கானதும் வெற்றிக்கும் தோல்விக்குமானதும் கூட.
elam
1 சனிக்கிழமை, 30 ஜனவரி 2010 22:10
dhivya
we have to give a savty to tamil people in srilanka

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

தேய்ந்த தமிழனே இன்னமும் நீ திருந்த மாட்டாயா? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
இன்னுமொரு அணி வேண்டுமா? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
innumoruani ippothu venduma? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
இன்னொரு அணி????? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
elections & tamils article of ravanesan தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்
THINK ABOUT KSMIR PEOPLE தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்
தேர்தலும்........................... தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்
sammanthar கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?
பிடித்த வசனம் பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு
Most of the "political leaders' are cheats கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும் !

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்