Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Pirabakaran-Anthathyகாவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)


சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)


யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)

 

குறிப்பு:

தாவில்லா     –  குற்றமில்லாத

முருகடியான் –  எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

அரி               -  சிங்கம்

உழுவக்கொடி – புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
பொருவில்     -  உவமையில்லாத

மாணார்         – பகைவர்; பேணார் –பகைவர்

உமையாள்     – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)

புணரிசார்       – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (5)
நன்றி
5 ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010 16:44
அகரம் அமுதா
மிக்க நன்றிகள் Sabarish
thanku for writting abt our leader
4 புதன்கிழமை, 03 மார்ச் 2010 03:37
Sabarish
i am very much happy to see ur lyrics abt out national leader..
i simply loved it, no words to say abt this...
but my tears are talking abt ur lyrics..
and this arts are very nice...
expecting more and more from u, my dear brother.


by
Sabarish
9841945671
Tamil Nadu
நன்றி!
3 புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010 00:39
அகரம் அமுதா
தேவமாயன், புதியபாரதி ஆகியோருக்கென் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கரிகாலனை கொண்டாடும் கவிதைகள் அருமை
2 செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010 12:33
thevamayan
அண்ணை தங்கள் தமிழில் தலைவன் புகழ்,
மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்
வாழிய உம் தமிழ்
வாழிய தலைவன்,
வாழிய தலைவன்,
கவிதைச் சிறப்புக் கொண்ட கரிகாலன் வரலாறு
1 சனிக்கிழமை, 30 ஜனவரி 2010 20:14
புதியபாரதி
இலக்கணப் பிழையற நிற்கும் இனிய கவிதை.
மாமகனின் வரலாறு இன்னொரு சிறப்பு
புதியபாரதி.

வாசகர் கருத்துக்கள், category: "பிரபாகரன் அந்தாதி"

நன்றி கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
thanku for writting abt our leader கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
மன்னிக்கவும்! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
பிழையாய் இருக்கலாம்.. கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
நன்றி! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
நன்றி! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
கரிகாலனை கொண்டாடும் கவிதைகள் அருமை கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
உங்கள் வெண்பா அருமை.! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
கவிதைச் சிறப்புக் கொண்ட கரிகாலன் வரலாறு கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்